மத்திய பிரதேசம் மாநிலம் மும்பை சாங்கிலி மாவட்டத்தில் இஸ்லாம்பூர் என்று ஒரு ஊர் அமைந்துள்ளது. அதனை இந்துத்துவ அமைப்பாளரின் தலைவரான சம்பாஜி பிடே என்பவர் ஈஸ்வர்பூர் என பெயர் மாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்காக அவர் சாங்கிலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இஸ்லாம்பூர் என்ற பெயரை மாற்றம் செய்து எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை நான் ஓய மாட்டேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இஸ்லாம்பூர் என்ற பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மராட்டிய அரசு அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்ற போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக, உணவு மற்றும் வினியோகத் துறை மந்திரி சட்டசபையில் கூறியதாவது, “மந்திரிசபை கூட்டத்தில் பெயர் மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
மந்திரிசபை முடிவை மத்திய அரசின் ஒப்புதலுக்காக மாநில அரசும் ஒப்புக்கொண்டது. இந்த பெயர் மாற்றம் தொடர்பாக இஸ்லாம்பூரை சேர்ந்த சிவசேனா தலைவர் ஒருவர் 1986 ஆம் ஆண்டு விடுத்த கோரிக்கை இன்று வரை நிலுவையில் உள்ளது” என தெரிவித்தார்
