தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் புதிய மற்றும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அனைவருக்கும் அக்கறை இருப்பதாகவும், அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் முறையாக நகர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ​இருப்பினும், இந்தச் சூழலை உணர்ச்சிபூர்வமாக எதிர்கொண்டு தொண்டர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

விசிக அலுவலகம் முன் ஒருவர் பிளேடால் கை நரம்பை வெட்டிக்கொண்டதும், வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய தமிழிசை, “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் உடனடியாக தனது ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட வேண்டும். வாக்களித்த மக்களும், ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும்; யாரும் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அவர் அன்பான வேண்டுகோள் விடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.