தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நீடித்து வரும் வேளையில், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மே 9) இரவு 7 மணியளவில் திடீரென திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்வதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை கேரளா செல்லவிருந்த தனது பயணத்தைத் தமிழக அரசியல் சூழல் காரணமாக அவர் ரத்து செய்திருந்த நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட போராடி வரும் சூழலில் ஆளுநரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தவெக-வின் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை ஏற்க மறுத்து, “எண்ணிக்கையை நிரூபித்தால் மட்டுமே அழைப்பு விடுக்கப்படும்” என்பதில் ஆளுநர் உறுதியாக உள்ள நிலையில், அவரது இந்தத் திடீர் பயணம் தமிழக அரசியல் நகர்வுகளில் ஒரு தற்காலிக ‘பிரேக்’ விழுந்துள்ளதைக் காட்டுகிறது.

ஆளுநர் மீண்டும் சென்னை திரும்பும் வரை கோட்டை அரியணை யாருக்கு என்கிற கேள்விக்கான விடை சஸ்பென்ஸாகவே நீடிக்கும் எனத் தெரிகிறது.