மின்சார விலாங்கு மீன் ஆபத்தான உயிரினமாக பார்க்கப்படுகிறது. இது எலெக்ட்ரோபோரஸ் வெப்ப மண்டலத்தில் வாழும் நன்னீர் மீன் வகை. இந்த மீன் தனது இரை மீது மின்சாரம் பாய்ச்சி அதை அதிர வைக்கும் தன்மை கொண்டிருப்பதால் மின்சார விலாங்கு என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒருவர் வீசிய வலையில் மின்சார விலாங்கு மீன் சிக்கி கொள்கிறது.
அப்போது ஒரு முதியவர் அங்கு வந்து மீனை கையால் பிடித்தார். அந்த சமயம் அந்த மீனின் மின்சாரத்தால் முதியவர் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர் அந்த மீனை பிடித்து இழுத்து முதியவரை காப்பாற்றினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
