கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14 வயது சிறுவன் guitar string-ஐ பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழாம் வகுப்பு மாணவனான காந்தர், ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு, தனது வீட்டில் அறுந்த guitar string-இல் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். காந்தரின் தந்தை இசைக்கலைஞர், தாயார் சவிதா நாட்டுப்புறப் பாடகி ஆவார். சம்பவம் நடந்தபோது, தாயார் நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார்.
போலீசார் கைப்பற்றிய தற்கொலைக் குறிப்பில், காந்தர், “அம்மா, அப்பா, நீங்கள் என்னை 14 வருடங்கள் நன்றாக வளர்த்தீர்கள். நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் இன்று நான் வெளியேற வேண்டிய நேரம் இது. நீங்கள் என் கடிதத்தைப் படிக்கும் நேரத்தில், நான் சொர்க்கத்தில் இருப்பேன்” என்று எழுதியிருந்தார். சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காந்தர் பிரபல ஜப்பானிய அனிமே தொடர் ‘Death Note’-இன் தீவிர ரசிகர் என்றும், அந்த தொடரில் வரும் கதாபாத்திரத்தின் படத்தை தனது அறையில் வரைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கதையின் தாக்கம் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ‘டெத் நோட்’ தொடரில், ஒரு மாணவருக்கு நரகத்திலிருந்து தவறுதலாக விழுந்த ஒரு குறிப்பேடு கிடைக்கிறது. அதில், ஒருவரின் பெயரை மனதில் நினைத்துக்கொண்டு எழுதினால் அவர்கள் உயிரிழக்கிறார்கள் என்ற கதை அம்சம் உள்ளது
