பிரபல டேட்டிங் செயலியான ‘டின்டர்’ மூலம் ஏற்பட்ட பழக்கம், பெண் நீதிபதி ஒருவருக்குப் பேராபத்தாக முடிந்துள்ளது. இந்தச் செயலியின் மூலம் அறிமுகமான ஒரு நபர், காதலிப்பது போல நடித்து அந்தப் பெண் நீதிபதியைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர், பல்வேறு காரணங்களைக் கூறி அவரிடமிருந்து சிறுகச் சிறுக சுமார் 52 லட்சம் ரூபாய் வரை பறித்து ஏமாற்றியுள்ளார்.
மேலும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த நீதிபதி, இச்சம்பவம் வெளியே தெரிந்தால் சமூகத்தில் தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்று அஞ்சியுள்ளார். இதனால், தனது பெயரில் புகார் அளிக்கத் தயங்கிய அவர், தன் வீட்டு வேலைக்காரரின் பெயரில் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார்.
இதனால் உயர் பதவியில் இருக்கும், சட்டம் தெரிந்த ஒருவரையே சைபர் குற்றவாளிகள் இவ்வளவு எளிதாக ஏமாற்றியிருப்பது காவல் துறை மற்றும் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்காரரின் பெயரில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
