இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது மருத்துவமனையின் பெட்டில் அமர்ந்திருக்கும் சிறுவன் ஒருவரிடம் தண்ணீர் பாட்டிலை ஒருவர் வந்து கொடுக்கிறார். அதனை வாங்கிய சிறுவன் தண்ணீர் குடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை கை கால்கள் நடுங்குகிறது. இதை அடுத்து அவர் அந்த பாட்டிலை கசக்குகிறார். அதன் பின் அருகில் இருந்தவர் அந்த பாட்டிலை வாங்கி விடுகிறார்.
இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, ஹைட்ரோபோபியா என்ற நோய் அந்த சிறுவனுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது இதற்கு நீர் வெறுப்பு அல்லது நீரச்சம் என்ற பொருளாகும். இது பெரும்பாலும் ரேபிஸ் நோயின் ஒரு அறிகுறியாக வரும். தண்ணீர் அல்லது திரவங்களை கண்டால் பயம் கொள்வதாகும். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
