“இது என்ன சினிமானு நினைச்சீங்களா? ஆட்சி நிர்வாகம்!” என்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி கூட்டத்தில் தவெக தலைவர் ஜோசப் விஜய்யை நோக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் காரசாரமாக அம்பு வீசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற ஒரே மாதத்திலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கேலிக்கூத்தான, அசிங்கமான ஆட்சியாக மாறிவிட்டது என்று சாடிய ஸ்டாலின், “பாஜக மற்ற மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்களை வாங்குவதைப் போல, தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அதிமுக எம்.எல்.ஏ-க்களை ஷாப்பிங் செய்து திருடி வருகிறார்; கான்பிடன்டாக இருங்க என்று சொல்லும் விஜய்க்கே தன் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை” என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தவெகவினரே அதிகம் ஈடுபடுவதாகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளதாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

மேலும், தான் நிதி ஆயோக் கூட்டத்திற்குப் போனதை இடி வழக்கில் தப்பிக்கப் போனதாக விஜய் விமர்சித்ததை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “பாஜகவை விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று விஜய் பயந்து போய் அமைதியாக இருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியதுடன், அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறிவது உறுதி என அதிரடி முழக்கமிட்டுள்ளார்.