தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆர்வி உதயகுமார். இவர் அதிமுக கட்சியின் கலை பிரிவு செயலாளராக இருந்த நிலையில் தற்போது அந்த பொறுப்பிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் நான் கடந்த 25 வருஷத்திற்கு மேலாக அதிமுகவில் இருக்கும் நிலையில் தற்போது கலைப்பிரிவு செயலாளராக இருக்கிறேன். தற்போதைய நிலை குறித்து ஆண்டு கவலையும் வேதனையும் அடைந்துள்ளேன்.
எனவே இத்தகைய சூழலில் என்னால் கட்சியில் தொடர முடியாது. எனவே கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவில் ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் இன்று சி. விஜயபாஸ்கரும் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் பல அதிமுக தலைவர்கள் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வர நிலையில் தற்போது நடிகை கௌதமியை தொடர்ந்து ஆர்வி உதயகுமாரும் அதிமுகவிலிருந்து விலகியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது

