தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அப்படம் போதிய வரவேற்பை  பெறாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

இவர் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடித்த பீஸ்ட், ராதே ஷ்யாம்,‌ சர்க்கஸ் போன்ற படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த பூஜா தன்னுடைய சம்பளத்தை 3 கோடியிலிருந்து 3.5 கோடியாக உயர்த்தினார். ஆனால் தற்போது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததன் காரணமாக நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.