தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மித்ரன் ஜவகர். இவர் தமிழ் சினிமாவில் யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நிலையில் நடிகர் தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போது அரியவன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு மாரி செல்வன் கதை எழுதி உள்ள நிலையில், புதுமுக நடிகர் ஈசான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அரியவன் படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.