“தை பிறந்தால் வழி பிறக்கும், அப்போது கூட்டணி குறித்து அறிவிப்பேன்” என்று கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் கூறி வந்தார். இன்று தை முதல் நாள் என்பதால், அவரது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அதிரடி அறிவிப்பு வரும் எனத் தொண்டர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால், செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “தை மாதத்தில் மொத்தம் 30 நாட்கள் இருக்கிறது. அதில் ஏதாவதொரு நல்ல நாளில் கூட்டணி குறித்து அறிவிப்பேன்” என்று கூறி மீண்டும் ஒரு சஸ்பென்ஸை உடைக்காமல் வைத்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஒருவர், “ஐயா, சீக்கிரம் முடிவைச் சொல்லுங்க.. நீங்க சொல்லாததால நாங்க தினம் தினம் செத்து பிழைக்கிறோம்” என்று புலம்ப, அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது. 2026 தேர்தலுக்கான காய்களை ஓபிஎஸ் நிதானமாக நகர்த்துகிறாரா அல்லது கூட்டணி முடிவாகாமல் இழுத்தடிக்கிறாரா என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
