திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிராஜ் என்ற சமூக ஆர்வலர், பொதுமக்கள் அதிகம் செல்லும் இடத்தில் வைக்கப்பட்ட பேனர் மூலம் அரசு அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளார். இந்த பேனரில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கேள்வி கேட்கும் வகையில் கூர்மையான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னையின் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிகளில் பொதுமக்களின் நலன் சார்ந்த திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றி நிறுத்த முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திருநெல்வேலியின் அரசு பொது மருத்துவமனை பகுதியில் நிறைவு பெறாத கால்வாய்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், இதற்கு பொறுப்பான அதிகாரிகளை “இஸ்ரோ தேடுகிறது, நாசா அழைக்கிறது” என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேனர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, அரசு துறைகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த பேனரில், கால்வாய்களின் புகைப்படங்களை இணைத்து, தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை பகுதியில் ஏற்பட்டுள்ள துர்நாற்றத்தை சுட்டிக்காட்டியுள்ளார் சிராஜ்.

மேலும் “பேனரை அகற்ற வரும் அதிகாரிகள் முதலில் இந்த துர்நாற்றத்தை நுகர்ந்து விட்டு அகற்றலாம்; தீர்வு கிடைக்கும் வரை போஸ்டர்கள் ஒட்டப்படும்” என்று அவர் தைரியமாக அறிவித்துள்ளார். இந்த பேனரை மக்கள் நின்று படிக்கும் காணொளியை எஸ்.ஆர்.சிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nellai S R Siraj (@nellai_s_r_siraj)