தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு அன்றும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் அல்லது டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.