சென்னையில் இன்று நடைபெற்ற ஜி.கே. மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் NDA தலைவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்துள்ளதுடன், அதிமுக தலைவர்களுடன் பேசும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி திட்டவட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவுகிறது.

சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதாவின் பழைய புகைப்படத்தை பகிர்ந்திருந்ததைத் தொடர்ந்து, தேமுதிக எந்த கூட்டணியில் இருப்பது என்ற குழப்பம் நிலவியது.

இந்நிலையில், இன்று நடந்த நிகழ்வில் NDA தலைவர்களுடன் எல்.கே. சுதீஷ் ஒரே மேடையில் உட்கார்ந்திருப்பது, எதிர்வரும் 2026 தேர்தலை முன்னிட்டு தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் நிச்சயமாக இருப்பது போலத் தென்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எல்.கே. சுதீஷ்; இது நட்பு ரீதியான பங்கெடுப்பு தவிர  அரசியல் தொடர்பான நிகழ்வு அல்ல என தெளிவுபடுத்தினார். இந்த தருணம் தற்போதைய தமிழக அரசியலில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.