தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைப்படி, இனிமேல் ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான நடைமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஊழியர்கள் தங்களது நிர்ணயிக்கப்பட்ட நாளில் ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள்மீது உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடிவடைந்த பிறகே அவர்கள் ஓய்வு நலன்கள் மற்றும் பணப் பலன்களை பெற முடியும் என அந்த அரசாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது மூலம் ஓய்வுநாளில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் மனஉளைச்சலை தவிர்க்க அரசின் முக்கியமான தீர்மானமாகவும் பார்க்கப்படுகிறது.