தேசிய திரைப்பட தினம் அக்டோபர் 13ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் இதனை முன்னிட்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 60 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. படம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 99 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதால் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் படம் பார்க்க சென்றனர்.

டிக்கெட் விலையை குறைத்தால் அதிக அளவில் பார்வையாளர்கள் படம் பார்க்க வருவார்கள் என்பதற்கு இதுவே சான்று என்று சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த முறை 99 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படவில்லை எனவும் மற்ற மாநிலங்களில் இந்த சலுகை இருந்ததாகவும் கூறப்படுகிறது.