கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பைங்குளம் ஊராட்சியில் கிள்ளியூர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு குளம் பராமரிக்கப்படாமல் தூய்மையற்ற முறையில் கிடந்த நிலையில் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அந்த குளத்தில் தற்போது தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அதாவது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் குளத்தில் இறங்கி அதிரடியாக தூய்மை பணிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் குளத்தை தூர்வாரிய நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் ஆதரவாளர் ஒருவர் திமுக அரசு செய்ய தவறிய வேலையை தமிழக வெற்றி கழகத்தின் தோழர்கள் களத்தில் இறங்கி செய்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
இறுமாப்புடன் ஆட்சி நடத்தும் பாயாச அரசு செய்ய தவறிய வேலையை தவெக தோழர்கள் செய்து அசத்தி உள்ளனர் .🔥🔥
குளத்தை சுத்தம் செய்த பைங்குளம் ஊராட்சி கிள்ளியூர் தொகுதி தவெக தோழர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் 👏👏👏❤️@tvkvijayhq @BussyAnand pic.twitter.com/BIq2tkPD9F
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) December 19, 2024
