கர்நாடக மாநிலத்தில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவை அண்டிய பகுதியில் வசித்து வந்த 58 வயதான ரஜிதா ரெட்டி, தனது கணவர் மற்றும் மகள் ஸ்ரீஜா (வயது 27) உடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
சமீபத்தில் வீட்டில் சமையல் செய்து முடித்த ரஜிதா, தனது மகள் ஸ்ரீஜாவை படுக்கையறையில் காணச் சென்றபோது, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பார்த்து கடும் அதிர்ச்சியில் உறைந்தார்.
உடனே கணவரை செல்போன் மூலம் அழைத்து, “நம் மகள் இனி இல்லை… அவள் இல்லாமல் நான் வாழ முடியாது. நானும் போய்க்கொண்டே இருக்கிறேன்…” என கூறிவிட்டு அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து அவசரமாக வீடு வந்த கணவர், தாய்-மகள் இருவரும் தூக்கில் தொங்கும் நிலையை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மகள் ஸ்ரீஜா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லையென கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
