துலாம் ராசி அன்பர்களே,

இந்த நாள் அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். சாமர்த்தியத்தை வெளிப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நட்பால் நல்லது நடக்கும். சகோதர வழியில் ஒற்றுமை பலப்படும். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

அனைத்து முயற்சியிலும் முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகம் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்கள் இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். நினைத்த வாழ்க்கை பிரகாசமாக அமையும்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். காரியங்களில் அற்புதமாக செயல்படுவீர்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 1, 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்