விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று இடமாற்றம் பற்றிய சிந்தனை மனதில் ஓடிக் கொண்டிருக்கும். வீட்டை விட்டுவிட்டு வேறு வீட்டிற்கு செல்லலாமா என்று யோசிப்பீர்கள். இடமாற்றம் உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும். எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். நேரத்திற்கு ஏற்றார் போல் தங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

பக்குவமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதையும் கூடும் இன்று பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியமாக எதிலும் ஈடுபடுவீர்கள்.

இன்று மாணவர்கள் மன பதட்டத்துடன் காணப்படுவீர்கள். தேர்வு பற்றிய பயம் இருக்கும். கல்விக்காக அதிக முயற்சி வேண்டும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: மூன்று நான்கு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்