கன்னி ராசி அன்பர்களே,

இன்று மிகவும் எச்சரிக்கையுடன் சில விஷயங்களை செய்ய வேண்டியது இருக்கும். ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளுங்கள். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை பேச்சை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள்.

குடும்பத்திற்கு வேண்டாத நபர்களால் சின்ன சின்ன விஷயங்கள் நடக்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் பிரச்சனைகள் தலை தூக்கி இருக்கும். மன அமைதியால் எந்த பிரச்சினையும் சரி செய்யலாம். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பண வரவு சீராக இருக்கும். இன்று பெண்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் அவசரப்படாமல் செயல்பட வேண்டும். இறைவனை முழுமையாக நம்புங்கள்.

இன்று மாணவர்கள் எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். நன்கு படிப்பது அவசியம். எதையும் யோசித்து செய்வது நல்லது. திறமையால் வெற்றி பெற முடியும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்