சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவீர்கள். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பிரச்சனைகள் படிப்படியாக தெரிந்து விடக்கூடும். சுயமரியாதை மேம்படும். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிய சம்பவங்கள் நடைபெறும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்க்கையில் புகழ் அதிகரிக்கும்.

மங்கள ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். கவனத்துடன் பணிகளில் ஈடுபட்டால் வெற்றி பெறலாம். பெண்கள் பெரியவர்களின் ஆசியை பெறுவீர்கள். எந்த காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திற்காக கண்டிப்பாக உழைப்பீர்கள். காலையில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். கல்வியில் சாதிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு புத்தியுடன் செயல்படுவீர்கள். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்