கடகம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக மனமகிழ்ச்சி ஏற்படும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும். மதிப்பும் மரியாதையும் உயரும். பண தேவைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முடிவுகள் வெற்றியை கொடுக்கும். முன்கோபத்தை விட்டு நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உழைத்து பயனடைவீர்கள். இன்று பெண்களுக்கு பணிசுமை அதிகரிக்கும். ஆச்சரியமான தகவல்கள் கிடைக்க பெறும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெற முடியும். குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்.

இன்று மாணவர்கள் எதிர்பாராத சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கல்வியில் சுலபமாக வெற்றி பெற முடியும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்