மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக உழைப்பால் உயரும் நாளாக இருக்கிறது. உடல் ஆரோக்கியம் சீராகி மகிழ்ச்சி அடைவீர்கள். நல்ல நண்பர்களை சம்பாதிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு பெருகும். சிந்திக்காமல் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம். மறதியால் விட்டுப்போன காரியங்களும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். தொழில் வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

தடைகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். உத்தியோகம் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியையும் குழப்பம் இல்லாமல் முடிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். உழைப்பால் முன்னேறி செல்வீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் ஏற்படும். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

இன்று மாணவர்கள் காலையில் சீக்கிரம் எழுந்து படிக்க வேண்டும். தேர்வுக்கு தயாராக இருப்பது நல்லது. சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 1, 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்