ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று நண்பர்கள் நல்ல தகவலை கொடுப்பார்கள். உத்தியோகம் முயற்சி வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். எடுக்கும் முடிவுகளில் மனக்குழப்பம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த லாபம் கண்டிப்பாக கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவதன் மூலம் சங்கடமான சூழலை சமாளிக்கலாம்.

முன்னேறுவதற்கான சூழல் உள்ளது. போட்டிகள் சாதகமாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். பணியிடங்களில் நல்ல பெயர் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பெண்கள் இன்று மனதளவில் ஏற்பட்ட கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். மாற்றங்கள் ஏற்படும்.

இன்று மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது. இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்