மேஷம் ராசி அன்பர்களே,

இன்று புதிய பாதை புலப்படும் நாள் என்று சொல்ல முடியும். தைரியமாக சில முடிவுகளை எடுக்க முடியும். கையில் ஓரளவு காசு பணம் புரளும். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட தடை தாமதங்கள் விலகும். மனம் ஆறுதல் தரும் விதத்தில் பயணம் மேற்கொள்வீர்கள். தந்தை வழி உறவினர்களால் நல்லது நடக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அலைச்சல் ஏற்படும்.

பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். இன்று பெண்களுக்கு குடும்பத்தை நிர்வாகிக்கும் சூழல் உள்ளது.

இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களை ஈடுபட வேண்டாம். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு, ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்