மீனம் ராசி அன்பர்களே,

கொஞ்சம் மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். திட்டம் தீட்டி எதிலும் ஈடுபட வேண்டியது இருக்கும். நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும். நிர்வாக திறமை உயர்ந்து காணப்படும். மாமன் மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். எதிர்ப்புகள் குறைந்து விடும். பகை பாராட்டியவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.

எந்த பிரச்சினைக்கும் இன்று தீர்வு கிடைக்கும். காலை நேரம் சோம்பேறித்தனமாக இருக்கும். அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபம் வேண்டாம். அதிரடியான சில திட்டங்களை தீட்டி வெற்றி பெற முடியும். பெண்கள் இன்று மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

மனமகிழ்ச்சி அதிகரிக்கும். கையில் காசு பணம் புரளும். இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். கல்வி மீது அக்கறை இருக்கும். நன்கு படித்த முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 3, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்