துலாம் ராசி அன்பர்களே,

இந்த நாள் புகழ்ச்சிக்கெல்லாம் நீங்கள் மயங்க மாட்டீர்கள். செய்யும் செயலை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். எதிர்பாராத வேலை சிறப்புடன் முடியும். தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகிச் செல்லும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.

உழைப்பால் உயரும் நாள் என்று சொல்லலாம். இன்று காரியத்தில் ஏற்பட்ட தடை தாமதங்கள் விலகும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குடும்ப பிரச்சினைகள் ஓரளவு தீரும். வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இன்று ஓய்வான நாள் என்று கூறலாம்.

குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகிக்க முடியும். இன்று மாணவர்கள் புரிதல் உணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும். கல்வி மீது முழு அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நன்றாக படித்து முன்னேறும் சூழல் உள்ளது. இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: நான்கு மற்றும் ஐந்து
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்