விருச்சிக ராசி அன்பர்களே,

இன்று செய்யும் தொழிலே தெய்வம். அந்த தெய்வத்தை நீங்கள் நல்ல முறையில் பார்த்து கொள்ளுங்கள். தொழிலுக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறது. வெளிநாட்டு தொழில் உங்களுக்கு நல்ல விதமாக கை கொடுக்கும். உறவினர் நண்பர்களால் மறைமுக போட்டிகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

இன்று வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் இருந்து சண்டை சச்சரவுகள் நீங்கும் பயப்பட வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. தாய் வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்கள் இன்று சூழலுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இன்று மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை சந்திப்பீர்கள். கல்வி மீது அக்கறை அதிகரிக்கும். படித்து  முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிஷ்ட எண்  :  மூன்று மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் நீல நிறம்