தனுசு ராசி அன்பர்களே,

இன்று நேர்பட பேசி நேர்மையாக நடந்து கொள்வீர்கள். மனதில் தோன்றுவது அப்படியே வெளிப்படுத்துவீர்கள். இன்று வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். இன்று எல்லா விதமான நன்மைகள் நடக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள்.

இன்று  உத்தியோகத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் விலகி செல்லும். தேவையான நிதி உதவிகள் கிடைக்கக்கூடும். இன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதர சகோதரிகளுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். சுயதொழில் தொடங்கலாமா என்ற எண்ணம் இருக்கும். குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவது நல்லது .

பெண்கள் இறைவழிபாட்டை கடைபிடிப்பது நல்லது. இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் செயல்படும் நாளாக இருக்கும். முயற்சிகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். கல்வியில் முழு அக்கறை ஏற்படும். இன்று விஷ்ணு பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  : வடகிழக்கு

அதிஷ்ட எண்  :  4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் நீல நிறம்