அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி குறித்துப் பேசியபோது,
உரிய நேரத்தில் அமமுக கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கும்,” என்று தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தான் விலகியதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை காரணமல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்தக் கூட்டணி முடிவுகள் குறித்துப் பேசிய தினகரன், “இந்தத் தேர்தலில் துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.
தமிழ்நாட்டில் வருங்காலத்தில் யாரும் நம்பிக்கை துரோகத்தை அரசியல் ரீதியாக எண்ணி கூட பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் துரோகத்தை வேரடி மண்ணோடு சாய்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கூட்டணி அமைத்துச் சந்திக்க இருக்கிறது,” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
