உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், ஆடையைச் சேறாக்கி அழுக்குப்படுத்தியதற்காக 6 வயது சிறுமி அவரது தந்தை மற்றும் சுத்தியால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமி ஷிபா, விளையாடும்போது தவறுதலாகச் சேற்றில் விழுந்து தனது ஆடையை அழுக்காக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை அக்ரம் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நிஷா ஆகியோர் குழந்தையைத் தடிகளால் கொடூரமாகத் தாக்கியதோடு நில்லாமல், அன்று இரவு முழுவதும் கடும் குளிரில் வீட்டின் மொட்டை மாடியில் தவிக்கவிட்டுள்ளனர். மறுநாள் காலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் விலா எலும்பு முறிவு உட்பட 13 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காசியாபாத் போலீசார், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட தந்தை அக்ரம் மற்றும் சித்தி நிஷா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
