உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், உறவுக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றிய 40 வயது நபர் ஒருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேலை நிமித்தமாகத் தனியாகத் தங்கியிருந்த அந்த இளம்பெண்ணைச் சந்திக்க வந்த அந்த நபர், கடந்த பிப்ரவரி மாதம் அவரை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இது குறித்து வெளியே சொன்னால் பெண்ணின் குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போடுவதாக மிரட்டி, தொடர்ந்து பலமுறை அந்தப் பெண்ணைச் சீரழித்ததுடன், அருவருக்கத்தக்க அந்தச் செயலை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உறவினரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டு, அதனை இணையத்திலும் பதிவேற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றவாளிக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தரவும் போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
