‘விடாமுயற்சி’ படக்குழு தீபாவளியை அஜர்பைஜானிலேயே கொண்டாட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாவதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘விடாமுயற்சி’ படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை முழுமூச்சில் நடத்தி முடித்துவிட நடிகர் அஜித் விரும்பியதால் இந்த வருட தீபாவளியை ‘விடாமுயற்சி’ படக்குழு அஜர்பைஜானிலேயே கொண்டாட உள்ளது.