சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சிலர் இன்று கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர், சங்பரிவார் அமைப்புகள் அங்கு கூட்டமாக வந்து இவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில் கனகசபையின் மற்றொரு வழியாக ஏறி வழிபட முயன்றனர். அதற்கு தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.