ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஈரானின் புதிய உச்ச தலைவர் அறிவுக்கூர்மை மிக்கவர் என்றும், அவர் போர் நிறுத்தத்தைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்ட ட்ரம்ப், ஆனால் ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளார். உலக வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை எந்தத் தடையுமின்றி ஈரான் முழுமையாகத் திறக்க வேண்டும் என்றும், அப்படித் திறந்தால் மட்டுமே போர் நிறுத்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுவரை ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறியிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஈரானின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? போர்க்களம் அமைதியாகுமா அல்லது மீண்டும் சூடாகுமா? என உலக நாடுகள் இப்போதே நகத்தைக் கடிக்கத் தொடங்கியுள்ளன.