தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள ஏ.டி.எம்-களில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் ரூ.72.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸ்கர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக ஐ.ஜி கண்ணன் கூறியுள்ளார்.

கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மாநிலங்களுடன் இணைந்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்டதில் இரண்டு பாரத் ஸ்டேட் வங்கி உட்பட நான்கு பொதுத்துறை வங்கிகளாகும். மேலும் கொள்ளையர்கள் குறிப்பிட்ட வங்கி ஏடிஎம்களை குறி வைத்து கொள்ளையடித்து சென்றதாகவும் ஏடிஎம் கொள்ளையில் அவர்கள் கைதேர்ந்தவர்கள் எனவும் ஐ.ஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.