தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இதுவரை அதிக வெப்பம் பதிவாகவில்லை என்றாலும் வெப்பத்துடன் கூடிய உஷ்ணம் நிலவி வருகிறது. கடலோரப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதமானது 50 முதல் 80 சதவீதம் வரை இருக்கிறது. இதன் காரணமாக சென்னை மாவட்ட நிர்வாகம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதாவது அதிக வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றால் அசோகர்யமான நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3:30 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் வெளி வேலைகளை தவிர்ப்பதோடு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் பிறகு மதுபான வகைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு வகைகளை சாப்பிடுவதோடு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.