தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்த வடிவேலு ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது படத்தை தயாரித்த இயக்குனர் சங்கருக்கும் நடிகர் வடிவேலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையை தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு தீர்த்து வைக்க முடிவு செய்தது. ஆனால் பிரச்சனை முடிவுக்கு வராததால் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு பிரச்சனை தீர்க்கப்பட்ட நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் அவருக்கு படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதன் காரணமாக தற்போது நடிகர் வடிவேலு சின்ன திரையில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிப்பதற்காக ஒரு எபிசோடுக்கு அவருக்கு ரூ.1 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் வடிவேலு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கண்டிப்பாக டிஆர்பி ரேட்டிங் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.