இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது வருங்கால கணவர் இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தை திடீரென உடல்நலக்குறைவு அடைந்ததால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அறியப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களும் ஸ்மிருதி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கியது மேலும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பலாஷ் முச்சலுக்கு எதிராக Reddit தளத்தில் புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. மேரி டி’கோஸ்டா என்ற பெண்ணுடன் பலாஷ் முச்சல் “ஸ்விம்மிங் செய்ய வருகிறீர்களா” என்று Flirt செய்ததாக கூறப்படும் ஸ்கிரீன்ஷாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கு மேரி டி’கோஸ்டா, “ஸ்மிருதியை Love பண்ணுகிறீங்களே… அப்போ என்னை ஏன் அழைக்கிறீர்கள்” என கேள்வி எழுப்ப, பலாஷ் முச்சல் கேள்வியைத் தவிர்த்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன்ஷாட்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ஸ்மிருதி–பலாஷ் உறவு குறித்து மீண்டும் பேச்சு பரபரப்பாகியுள்ளது.
