தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் அடைந்த சரிவு குறித்து, முன்னாள் வீரர்களிடையே நடந்த உரையாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகித் தடுமாறிய நிலையில், முன்னாள் டெஸ்ட் வீரர் கருண் நாயர், தனது X பக்கத்தில்,
“சில சூழ்நிலைகளைக் காணும்போது, நம் மனதில் ஒரு நெருக்கமான உணர்வு உண்டாகிறது. ஆனால், நாம் அங்கே களத்தில் இல்லையே என்ற அந்த அமைதி, ஒருவித வலியைத் தருகிறது” என்று தன்னை அணியில் சேர்க்காதது குறித்து மறைமுகமாக ஆதங்கத்தைப் பதிவிட்டார்.
Adei😂 https://t.co/PiLMwlYoCe
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) November 24, 2025
“>
இந்த ஆதங்கத்தைக் கண்ட முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், நாயரின் பதிவை ரீ-ட்வீட் செய்து, சிரிப்பு ஸ்மைலியுடன் “அடேய்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார். பொதுவாக நண்பர்கள் மத்தியில் கேலியாகப் பயன்படுத்தப்படும் இந்த வார்த்தை, ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
