இந்திய மகளிர் அணி சமீபத்தில் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமண விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது திடீரென ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவரது காதலர் பலாஷுக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரது தந்தை மற்றும் காதலருக்கு அடுத்தடுத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்களும் வேதனை அடைந்துள்ளனர்
