கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனக்கு 40 வயதாகும் நிலையிலும் சவுதி லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) அன்று அல் நாசர் அணிக்காக, ஒரு நம்ப முடியாத ‘பைசைக்கிள் கிக்’ (Overhead Kick) கோலை அடித்து மீண்டும் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ரியல் மாட்ரிட் அணிக்காக 2017-ல் அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோலை நினைவுபடுத்தும் விதமாக அமைந்த இந்தக் கோல், 2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா புஸ்காஸ் விருதை வெல்லும் போட்டியில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“>

 

8 போட்டிகளில் 9 கோல்கள் அடித்து அதிரடி ஃபார்மில் இருக்கும் ரொனால்டோ, தற்போது 954 கோல்களுடன் 1000 கோல்கள் என்ற புதிய சாதனையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறார். விரைவில் ஓய்வு பெறப்போவதாகக் கூறியுள்ள ரொனால்டோ, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்வதற்காகப் போர்ச்சுகல் அணிக்காக ஆறாவது முறையாக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.