கேரள மாநிலம் இரிக்கூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தர்ஷிதா(22). இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தர்ஷிதாவுக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தராஜு(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தர்ஷிதா திருமணம் ஆன பிறகும் தனது கள்ளக்காதலனுடன் தொடர்ந்து பேசியுள்ளார்.

கடந்த 22-ஆம் தேதி வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகை 5 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது. தர்ஷிதாவும் மாயமானார். இதற்கிடையே கர்நாடகா மாநிலம் சாலிகிராமத்தில் உள்ள ஒரு விடுதியில் கொடூரமான முறையில் தர்ஷிதா கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவரது வாய்க்குள் டெட்டர்னேட்டர் வைத்து வெடிக்க வைத்ததால் முகம் சின்னா பின்னமாகி தர்ஷிதா கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது தர்ஷிதாவுக்கு சித்தராஜுடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. 30 பவுன் தங்க நகை, 5 லட்ச ரூபாய் பணத்தை கணவர் வீட்டில் இருந்து தர்ஷிதா திருடி இருக்கலாம். அதனை பறிப்பதற்காக சுந்தரா ராஜு அவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.