தமிழக வெற்றிக் கழகத்தின்  உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஏ. செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் தவெக-வின் பலத்தைப் பெருக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஒருவரைத் தவெக-வில் இணைக்க அவர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், அந்த முன்னாள் அமைச்சர் தவெக-வில் இணைய மறுப்புத் தெரிவித்துள்ளார். “தற்போதைய அரசியல் சூழலில் ஆளுங்கட்சியான திமுக-வில் இணைவதே தனது எதிர்காலத்திற்குச் சரியாக இருக்கும்; ஏற்கனவே திமுக தரப்பிலிருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளது” என்று அவர் செங்கோட்டையனிடம் கைகழுவி விட்டதாகத் தெரிகிறது.

ஏற்கனவே டெல்டா மாவட்டத்தின் முக்கியத் தலைவரான வைத்திலிங்கம், ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி திமுக-வில் இணைந்துவிட்ட நிலையில், செங்கோட்டையன் முன்னெடுத்த இந்தத் திருப்பூர் ‘ஆபரேஷன்’ தோல்வியில் முடிந்தது தவெக-வுக்குச் சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.