திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு  பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இதனால் பக்தர்கள் பயனடைந்து வரும் நிலையில், தற்போது பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது நற்செய்தி ஒன்றை அளித்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக திருமலை தேவஸ்தானம் இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதில் பக்தர்கள் இலவசமாக 24 மணிநேரமும் பயணிக்கலாம். இந்நிலையில் பெட்ரோல், டீசல் பேருந்துகளின் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதேபோல் தேவஸ்தானத்தின் பயன்பாட்டிற்கு 11 மின்சார கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.