உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் புதிய அறிவிப்புகளை தினம்தோறும் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட தரிசன டிக்கெட் பெறுவதில் மோசடிகளை தடுக்க ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இந்த  நிலையில் திருப்பதி மலையில் பக்தர்களை போக்குவரத்து வசதிக்காக திருமலை தேவஸ்தானம் 11 இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது.

இதில் பக்தர்கள் இலவசமாக 24 மணி நேரமும் பயணிக்கலாம். தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் பேருந்துகளின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தான முடிவு செய்துள்ளது. அதனைப் போலவே தேவஸ்தானத்தில் பயன்பாட்டிற்கு மின்சார கார்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.