அமெரிக்காவின் சவுத் கரோலினாவில், காதலி பிரேக்-அப் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்த காதலன் ஒருவன், அவள் இனி யாரையும் முத்தமிடக் கூடாது என்ற விபரீத எண்ணத்தில் அவளது உதட்டைக் கடித்துத் துப்பிய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர வைத்துள்ளது.

கடந்த 2017 அக்டோபர் மாதத்தில், அப்போது 19 வயதான காயலா ஹேய்ஸ் (Kayla Hayes) என்ற பெண், தனது காதலன் சேத் ஆரோன் பிளீரி (Seth Aaron Fleury)-யுடனான காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Historic Moments (@historic)

இதனை ஏற்க மறுத்த சேத், பழிவாங்கும் வெறியோடு காயலாவைத் வற்புறுத்தி முத்தமிட முயன்றதுடன், திடீரென அவளது கீழ் உதட்டை மிகக் கொடூரமாகக் கடித்ததில், உதட்டின் ஒரு பெரிய பகுதி துண்டாகித் தரையில் விழுந்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் துடித்த காயலா, தனது உடைந்த உதட்டைத் தரையிலிருந்து கைகூட்டி எடுத்துக்கொண்டு அலறியடித்தபடி மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

அங்கு அவளது முகத்தில் பல தையல்கள் போடப்பட்டு, பல கட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட போதிலும் அவளது முக அமைப்பே முற்றிலும் மாறிப்போனது. இந்த கொடூரக் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட காதலன் சேத்திற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேளையில், இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்களை இன்னும் வலுவாக்க பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

அந்தப் பயங்கர வடுக்களிலிருந்து மீண்டு வந்துள்ள காயலா, தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு தைரியமான பெண்ணாகத் தனது வாழ்க்கையை மாற்றி, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்.