“எங்க நாட்டுக்கு வர்ற தண்ணிய மட்டும் இந்தியா தடுத்து நிறுத்துச்சுன்னு தெரிஞ்சா , அப்புறம் நாங்க சும்மா இருக்க மாட்டோம், இந்தியா மேல போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் !”
என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் ஏ.ஆர்.ஒய் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் ஆக்ரோஷமாக விடுத்துள்ள நேரடிப் போர் அச்சுறுத்தல் சர்வதேச எல்லையில் மாபெரும் பதற்றத்தையும் இந்திய ராணுவ வட்டாரத்தில் உஷார் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சொந்த நாட்டில் நிலவும் மோசமான நிர்வாகச் சீர்கேட்டால் வரலாறு காணாத உள்நாட்டுத் தண்ணீர் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தனது தோல்விகளை மறைப்பதற்காக தற்பொழுது இந்தியா மீது பழி சுமத்தத் தொடங்கியுள்ளது;
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அதிரடியாக இடைநிறுத்தம் செய்துள்ளதால் இஸ்லாமாபாத் அடியோடு நிலைகுலாய்ந்து போயுள்ளது.
உலக வங்கியின் விசித்திர மத்தியஸ்தத்தின் படி சிந்து நதியின் 80% நீரைப் பயன்படுத்தும் பாகிஸ்தான், அதைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் தனது விவசாய நிலங்களைப் பாழாக்கிவிட்டு, தற்பொழுது இந்தியா நீரை ஆயுதமாக்குவதாகவும் செனாப் நதியின் நீரோட்டத்தைக் கையாளுவதாகவும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறது;
இருப்பினும், கடந்த ஆண்டில் என்ன நடந்தது என்ற அசல் டேட்டாக்கள் கூட தன்னிடம் இல்லை என்பதை பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டதன் மூலம், பாகிஸ்தானின் இந்த வெற்று மிரட்டல் உலக அரங்கில் மாபெரும் சிரிப்பாய் போயுள்ளதுடன், பயங்கரவாத உள்கட்டமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை நதி நீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது என்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரும்புக்கரம் கொண்டு உறுதியாக நிற்கிறது.
